இந்தியாவில் நுகர்வு இடைவெளி குறைந்துவந்தாலும், வருமான ஏற்றத்தாழ்வு வேகமாக அதிகரிக்கிறது என உலக வங்கியின் சமீபத்திய தரவு தெரிவிக்கிறது. ஒரு குடும்பமோ தனிநபரோ குறைந்த வருமானம் காரணமாக விரும்பிய அளவு செலவு (ஆரோக்கியமான உணவு, வீடு, கார் போன்ற போக்குவரத்து வசதி) செய்ய முடியாத நிலை இருந்தால், அதுவே ‘நுகர்வு இடைவெளி’ (consumption gap) என வரையறுக்கப்படுகிறது.
உலக வங்கியின் தரவின்படி, இந்தியாவின் நுகர்வு அடிப்படையிலான ஜினி துணைக்காரண (Gini coefficient – சமத்துவமின்மை அளவீடு) அளவீடானது 2011-12 இல் 28.8 ஆக இருந்த நிலையில், 2022-23இல் அது 25.5 ஆகக் குறைந்துள்ளது; இந்த அளவீடானது, இந்தியாவில் நுகர்வு இடைவெளி குறைந்துவருவதைக் குறிக்கிறது.