ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளிப்பதாகக் கூறி, வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர் ஆணையரை வெளியேற்ற வேண்டும் என்று ஹஸ்னத் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, 1971 விடுதலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பை வங்கதேச இடைக்கால அரசு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

