சென்னை: கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக 3 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையே 2-வது 20 ஓவர் கிரிக்கெட் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.20 க்கு புறப்பட வேண்டிய ரயில் 10.30க்கு புறப்படும். வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில் சேப்பாக்கத்தில் இரவு 10.27 முதல் 10.37 வரை நிறுத்தபடும். சென்னை சேப்பாக்கத்தில் இருந்து 10.37 மணிக்கு புறப்படும் ரயில் 10.52 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி: கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக 3 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.