இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கடந்த 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போப் ஆக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் தோன்றி உரையாற்றினார். அப்போது உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.