இந்தியா – மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் நட்புரீதியிலான 2 சர்வதேச ஆட்டங்களில் மோத உள்ளன. இந்த ஆட்டம் வரும் 30-ம் தேதி மற்றும் ஜனவரி 2-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பிஃபா கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணி 69-வது இடத்திலும், மாலத்தீவுகள் 163-வது இடத்திலும் உள்ளன. இந்திய கால்பந்து அணி கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து மகளிர் சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தது. இந்த தொடரில் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோல்வி கண்டிருந்தது.