தூத்துக்குடி: தமிழ் ஆட்சி மொழி, ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது இங்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய அரசு தமிழகத்தை ஒடுக்குவது என்பது ஜனநாயக மாண்புகளுக்கு முரணானது, எதிரானது. ஜிஎஸ்டி வரி வசூலை ஒன்றிய அரசுக்கு வழங்க மாட்டோம். சுங்கச்சாவடிகளை அமைக்க மாட்டோம். நீட் உள்ளிட்ட தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம் என்பன போன்ற அதிரடியான முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் அரசியலை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதற்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி, ஆங்கிலம் தொடர்பு மொழி. இங்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் என்ன?.
இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்தியை திணிக்க அவசியம் என்ன..? வேல்முருகன் கேள்வி appeared first on Dinakaran.