தேனி : தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி நகர் பங்களாமேட்டில் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் வக்கீல்.
ஸ்டீபன் தலைமை வகித்தார். இதில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி எம்.பியுமான தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், போடித் தொகுதி திமுக பொறுப்பாளர் நேருபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மதிமுக மாணவரணி அமைப்பாளர் பார்த்தசாரதி, விசிக மாணவர் சங்கத்தை சேர்ந்த சேகுவாரா, ஏஐஎஸ்எப் அமைப்பை சேர்ந்த வரதன், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த வேல்பிரகாஷ், திராவிட மாணவர் கழகத்தை சேர்ந்த ஜீவா, சமூக நீதி மாணவர் இயக்க மண்டல செயலாளர் சதாம், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினை சேர்ந்த முகமதுசபீர், ஜாபர்சாதிக் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கூட்டத்தில் தேனி முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த ஒரு சிறுவன், இந்தி திணிப்பு பேராட்டத்திற்காக தனது சேமிப்பு பணமான ரூ.5 ஆயிரத்தை, எம்பி தங்கதமிழ்செல்வனிடம் அளித்தது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகடையச் செய்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், தேனி நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதாசிவக்குமார், போடி ராஜேஸ்வரி சங்கர், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி, பூதிப்புரம் சேர்மன் கவியரசு, நகர திமுக செயலாளர்கள் தேனி நாராயணபாண்டியன், பெரியகுளம் முகமது இலியாஸ், போடி புருசோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் தேனி வடக்கு சக்கரவர்த்தி, போடி கிழக்கு அய்யப்பன், பெரியகுளம் வடக்கு பாண்டியன், தாமரைக்குளம் சேர்மன் பால்பாண்டியன், தென்கரை சேர்மன் நாகராஜ், மார்க்கையன்கோட்டை சேர்மன் ஓ.ஏ.முருகன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.பாண்டியராஜன் மற்றும் தேனி வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post இந்தியை திணிக்க முயலும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.