
புதுடெல்லி: மூடிஸ் நிறுவனம் அதன் குளோபல் மேக்ரோ அவுட்லுக் 2026-27 அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”வலுவான உள்கட்டமைப்பு, பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதி மற்றும் வலுவான உள்நாட்டு தேவை ஆகியவை இந்திய வளர்ச்சியின் மீள்தன்மைக்கு வலுவான ஆதாரமாக உள்ளன.
இதன் காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி 2027 வரை 6.5 சதவீதமாக நீடிக்கும். உலகளாவிய நிச்சமயற்ற தன்மைகள் மற்றும் வர்த்தக தடைகள் அதிலும் குறிப்பிட்ட சில ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகமாக இருந்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சியானது ஈர்க்கக்கூடிய அளவிலான மீள்தன்மையை காட்டியுள்ளது.

