வாஷிங்டன் / மாஸ்கோ: 30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த ட்ரம்ப்பிடம் உறுதியளித்துள்ளார்.
மூன்றாடுகளாக நீடித்துவரும் உக்ரைன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக 30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று புதின் உறுதியளித்துள்ளார்.