‘கேம் சேஞ்சர்’படத்திலிருந்து #Lyraanaa பாடலை படக்குழுவினர் நீக்கிவிட்டனர். இதற்கான காரணத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘கேம் சேஞ்சர்’ படத்தில் இன்ஃப்ராரெட் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட பாடல் Lyraanaa. இப்பாடல் குறித்து விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், தமன் உள்ளிட்ட அனைவருமே மிகவும் பெருமையாக பேசினார்கள். உலகளவில் ஒரு பாடலுக்கு அந்த கேமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது ‘கேம் சேஞ்சர்’ படத்தில் தான் என்று குறிப்பிட்டார்கள்.