பெங்களூரு: பெங்களூருவில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் சன்னா துர்கப்பா (45) பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் தன்னுடன் பணியாற்றிய பேராசிரியர்கள் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், கோவிந்த ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஷ்வேஸ்வ‌ரையா, ஹர கேவிஎஸ் தாசப்பா, பல்ராம், பி ஹமலதா மிஷி, சட்டபாத்யாயா கே, பிரதீப் டி சௌகர், மனோகரன் ஆகியோர் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில், “பட்டியலினத்தை சேர்ந்த என்னை பொய்யான வழக்கில் சிக்க வைத்து, சாதி ரீதியாக 18 பேராசிரியர்கள் திட்டினர். என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர். சம்பந்தப்பட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரினார்.