மும்பை: இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பைவிட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு குறைவாக உள்ளது. இந்திய ராணுவ வலிமையுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானின் ராணுவ வலிமை பலவீனமாக உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் இது வெட்டவெளிச்சமானது. இதுபோல பொருளாதார ரீதியிலும் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடி டாலராக (ரூ.340 லட்சம் கோடி) உள்ள நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மதிப்பு வெறும் 350 பில்லியன் டாலராக (ரூ.29.7 லட்சம் கோடி) உள்ளது.