புதுடெல்லி: இன்று காலையும் ஆத்திரமூட்டும் தீவிர தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று(மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, ஆகியோர் பங்கேற்றனர்.