புதுடெல்லி: "சவுதி அரேபியாவுடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது. சமீப காலங்களில் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மூலோபாய ஆழத்தையும் உத்வேகத்தை பெற்றுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு இன்று கிளம்பிச் சென்றார். பயணத்துக்கு முன்பாக பிரதமர் மோடி கூறியதாவது: "பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் சவுதி அரேபியாவுக்குச் செல்கிறேன். சமீப ஆண்டுகளில் மூலோபாய ஆழத்தையும், உத்வேகத்தையும் பெற்றுள்ள சவுதி அரேபியாவுடனான நீண்டகால வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.