புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சுற்றி சாலை, நடைபாதை, சுரங்கப்பாதைகளில் தங்கியிருந்த நோயாளிகள், உறவினர்களை சந்தித்த ராகுல் காந்தி, மத்திய மற்றும் டெல்லி அரசுகள் இவர்கள் மீது பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (வியாழக்கிழமை) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே தங்கியிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்களை சந்தித்து, அவர்களின் குறைகள், பிரச்சினைகளை கேட்டறிந்தார்.