
தெற்கு சுலவேசி: இந்தோனேசியாவில் உள்ள டரோஜா பழங்குடியினர் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பாதுகாத்து பல ஆண்டு கழித்து அதிக செலவில் கொண்டாட்டத்துடன் இறுதிச் சடங்கை நடத்துகின்றனர்.
உலகின் பல பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் அல்லது தகனம் செய்யப்படும். ஆனால், இந்தோனேசியாவில் உள்ள டரோஜா பழங்குடியினர், தங்கள் குடும்பத்தில் இறப்பவர்களின் உடலை பதப்படுத்தி வைத்து அவர்களுடன் வாழ்கின்றனர். இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் உள்ள டனா டரோஜா பகுதியில் இந்த வினோத வழக்கம் உள்ளது. இறப்பு என்பது மற்றொரு மிகப் பெரிய பயணம் என அவர்கள் நம்புகின்றனர்.

