ஈரானின் கடல் எல்லை பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறி நுழைந்தது என்று கூறப்படுகிறது. இது சர்வதேச விதிமீறல் என ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால், அமெரிக்க போர் கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது. இதனையடுத்து, ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அதனை எதிர்கொண்டது. அந்த ஹெலிகாப்டர், நேராக கப்பலின் மேல் பறந்து சென்றபடி, எச்சரிக்கை விடுத்தது.
அப்போது, அதற்கு பதிலளிக்கும் விதத்தில் அமெரிக்க கப்பல் செயல்பட்டது, ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தியது. ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரான் விமான பாதுகாப்பு படையினர் பதிலுக்கு, அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என பதிலளிக்கப்பட்டது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என்று தெரிவிக்கப்படுகிறது.
The post ஈரானின் கடல் எல்லை பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறல்! appeared first on Dinakaran.