ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாதக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். அதே வேளையில் திமுக சார்பில் வேட்பாளராக வி.சி.சந்திரகுமாரும், நாதக சார்பில் சீதாலட்சுமியும் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன் சத்திரன் பகுதியில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலில் போட்டியிட இதுவரை 9 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், கடைசி நாளான நாளை திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
The post ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு நாளையுடன் நிறைவு: திமுக, நாதக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல் appeared first on Dinakaran.