ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. கடந்த 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 13-ம் தேதி வரை 9 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.