சிவகங்கை: “பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்தார். அதில் வெற்றியும் கண்டார். இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பதுதான் பெரியார் கொள்கை. ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரை சீமான் விமர்சித்து வாக்குகளை கேட்டால் தெரியும்? ஆரியர்கள் அல்லாத ஓர் இனம்தான் திராவிடம். தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சேர்ந்தது தான் அது. ஐந்து மாநிலங்களின் ஒற்றுமையை குறிக்கிறது.திராவிடன் என்று சொல்வது தமிழர்களின் விரிந்த பார்வையை காட்டுகிறது,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதல்வர் திறக்க உள்ள வளர் தமிழ் நூலகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 80,000 நூல்களை வைப்பதே லட்சியம். நூல்கள் அன்பளிப்பை வரவேற்கிறோம். திருவள்ளுவர் உடையை காவியாக மாற்றியது வருத்தமளிக்கிறது. ஆளுநரை கண்டித்து பார்க்கிறோம். ஆனால், அவர் தமிழக வரலாறு, பண்பாடு, திருவள்ளுவர் வரலாறு தெரியாமல் தொடர்ந்து பிழையை செய்து வருகிறார்.