சென்னை: “உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிச.9-ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ளது. சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்கு தமிழக மக்களும், நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (நவ.28) தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.