ரியாத்: சவுதி அரேபியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்கா -ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிகக் வெளியுறவு துறை அமைச்சர் மார்கே ரூபியோ மற்றும் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் ஆகியோர் தலைமையிலான இருநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post உக்ரைன் போர் குறித்து ரஷ்ய- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.