ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.47 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர்.
உலகத்தையே கலக்கத்தில் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.38 லட்சத்தை தாண்டிவிட்டது
இந்த தொற்றானது, இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,151,002 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 482,811,867 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 417,343,460 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,317,405 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.