குவஹாத்தி: “மின்னணு புரட்சி, புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றை சார்ந்தே சர்வதேச முன்னேற்றம் உள்ளது” என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உலகளாவிய நிச்சயமற்ற நிலையிலும் கூட, ஒன்று நிச்சயம் – அது இந்தியாவின் விரைவான வளர்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாட்டை (Advantage Assam 2.0) பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 25) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "கிழக்கு இந்தியாவும், வடகிழக்கு இந்தியாவும் இன்று எதிர்காலத்திற்கான ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றன. அசாமின் சிறப்பான திறன் மற்றும் முன்னேற்றத்தை உலக நாடுகளுடன் இணைக்கும் மாபெரும் முன்முயற்சியாக இந்நிகழ்ச்சி உள்ளது.