சென்னை: உலக செவிலியர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்றுபோல கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார். பாலினம், சமூக தகுதி, சாதி,மதம்,நிறம் பற்றி சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோல் கருதி சிகிச்சை தருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post உலக செவிலியர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாழ்த்து appeared first on Dinakaran.