எதிரிகளால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் நிதி உதவி கோரிவிட்டு பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தது. நிதி உதவி கோரி சமூக வலைதள பதிவு வெளியான நிலையில், தங்களது எக்ஸ் கணக்கை முடக்கி யாரோ அவ்வாறு பதிவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதார விவகாரப் பிரிவு எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ எதிரிகளால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச பங்குதாரர்களிடம் இருந்து அதிக கடன்களை எதிர்பார்க்கிறோம். பங்குச் சந்தை சரிவு, போர் சூழல் முற்றி வருவதையடுத்து பதற்றத்தை தணிக்க சர்வதேச பங்குதாரர்கள் உதவ வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.