மதுரை : உலக புகழ்பெற்றபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகலை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள் களம் இறங்க உள்ளன. 900 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின.
காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்
முன்னதாக முதற்கட்டமாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. 40 மருத்துவர்கள் உள்ளடங்கிய 120 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு பரிசோதனை செய்து வருகிறது
சிறந்த வீரர், காளைக்கு டிராக்டர், கார் பரிசு
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றபெறும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது, முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசளிக்கப்படுகிறது.2-வது பரிசுபெறும் காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசுவும், மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் வளக்கப்படுகிறது. மேலும் பாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கக்காசு, அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன
தயார் நிலையில் மருத்துவ குழு, 2000 போலீசார் பாதுகாப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்காக 7 மருத்துவ குழுவும், வீரர்களுக்காக 25 மருத்துவர்கள் என 120 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
2500 போலீசார் பாதுகாப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை காவல் ஆணையர் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
The post உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின appeared first on Dinakaran.