
புதுடெல்லி: ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
இதன் தொடக்க விழாவில் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு உலக பொருளாதாரம் படிப்படியாக மீட்சி அடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு வருகின்றனன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது.

