உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி அண்டை மாநில தொழிலாளர்களும் சீசனுக்கு ஏற்றார் போல் பொருட்கள் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கத்தி, அருவா, கொடுவா, கோடாரி, உளி உள்ளிட்ட வீடு மற்றும் விவசாயத்துக்கு தேவையான பொருட்களை இரும்பு பட்டறை அமைத்து நெருப்பில் காட்டி விற்பனை செய்து வருகின்றனர். சிலர் இரும்பு பொருட்களை கொடுத்தால் அவற்றை நெருப்பில் காட்டி, அங்கேயே அடித்து வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு கொடுவா மற்றும் கத்தி விலை 200 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல் கோடாரி ரூ.700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி விவசாயிகள் தங்களிடம் இருக்கும் இரும்பு பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்து தேவையான பொருட்களை வடிவமைத்து கேட்டு வாங்கி செல்கின்றனர். இவர்களிடம் தரமாக கத்தி, கொடுவா உள்ளிட்டவை கிடைப்பதாக கூறி சிலர் ஆவர்முடன் வாங்கி செல்கின்றனர்.
The post உளுந்தூர்பேட்டையில் கத்தி, அருவா, கோடாரி செய்து விற்கும் வடமாநில தொழிலாளிகள் appeared first on Dinakaran.