பெய்சிங்: ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை போனஸாக வழங்க முன்வந்த சீன நிறுவனம் ஒன்று பண தாள்களை மேஜையில் பரப்பி அவற்றை எண்ண முடிந்த அளவுக்கு அள்ளி செல்லும்படி கூறி சவால் விடுத்தது சமூக வலைத்தள வாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஊழியர்களை நிறுவனங்கள் கோவுருவிக்க தவறுவது இல்லை. அதிலும் ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்கள் யூகித்திடாத வகையில் அவர்களை மகிழ்வித்து அழகு பார்த்து வருகிறது. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றாக தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது சீனாவை சேர்ந்த சுரங்க ஹெனான் கிரேன் தயாரிப்பு நிறுவனம். சீன புத்தாண்டையொட்டி ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி போனஸ் வழங்க முன்வந்த இந்த நிறுவனம் அதற்கென போட்டி ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி நிறுவனத்தின் பிரமாண்ட அறைக்குள் ஊழியர்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு முன்பு சுமார் 70 மீட்டர் மேஜையில் ரூ.70 கோடி பணத்தாள்களை பரப்பி இனிப்பான செய்தியை பகிர்ந்து இருக்கிறது. மேலும், 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணத்தாள்களை என்ன முடியுமோ அவற்றை வீட்டிற்கு எடுத்து செல்லலாம் என்று கூறியது நிறுவனம். நிறுவனம் நடத்திய இந்த சவாலான விளையாட்டில் பணத்தை வேகமாக என்ன தெரிந்தவர்கள் லட்சங்களை அள்ளி உள்ளனர். அதிகபட்சமாக ஒருவர் 12 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை எண்ணி தனது ஆண்டு இறுதி போனஸ் தொகையாக்கி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இந்த காட்சியை பார்த்த பலரும் நிறுவனத்தின் தாராள மனப்பான்மையை பாராட்டி வருகின்றனர். இதே நிறுவனம் இதற்கு முன்பும் ஊழியர்களுக்கு இதுபோன்ற புது விதமாக போனஸ் வழங்கி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
The post ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை போனஸாக அறிவித்த சீன நிறுவனம்: பணத்தை அள்ளிச்செல்ல ஊழியர்களுக்கு நிபந்தனை விதிப்பு appeared first on Dinakaran.