பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வசம் தோல்வியை தழுவியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அது குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் என்ன சொல்லி உள்ளார் என பார்ப்போம்.
நடப்பு சீசனில் சொந்த மண்ணில் மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது ஆர்சிபி. அந்த அணி பதிவு செய்துள்ள நான்கு வெற்றிகளும் பிற அணிகளின் மைதானங்களில் பெற்றவை. நேற்று (ஏப்.18) மழை காரணமாக பெங்களூரு மற்றும் பஞ்சாப் இடையிலான ஆட்டம் தலா 14 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.