சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாங்கள் வாங்கிய கடனின் அளவு மாநில உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள்தான் இருந்தது. ஆனால், இப்போது திமுக அரசின் கடன் சதவீதம் 26 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதையே நாங்கள் சொன்னால் எங்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதா? வருவாய் பற்றாக்குறை எங்கள் ஆட்சியில் இருந்ததைவிட அதிகமாகிவிட்டது என்பதே உண்மை.
இதற்கு அமைச்சர் விளக்கம் அளித்திருக்க வேண்டும்.சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்டத்திற்கு செலவழிக்கும் ரூ.26,000 கோடி நிதியை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த செலவு, மூலதன செலவில்தான் வரும். இந்த தொகைகளை கூட்டினால்கூட, இந்த ஆட்சியில் மூலதன செலவு உயரவில்லை. அப்படியானால், பல திட்டங்கள் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளது. நிதி மேலாண்மையில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது appeared first on Dinakaran.