யாழ்ப்பாணம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி நெடுந்தீவு அருகே மண்டப மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டப மீனவர்கள் 8 பேரில் 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 2 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இருவருக்கு ரூ.40 லட்சம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 6 பேர் விடுதலை appeared first on Dinakaran.