செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை எதிர்காலத்தில் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று போர்ட்போலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் நிறுவனரும், சந்தை நிபுணருமான சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்த தசாப்தத்தில் இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. அங்கு சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வேலைவாய்ப்பு படிப்படியாக அழிவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.