ரயிலும் ரயில் சார்ந்த களத்துடன் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் வியாபித்துள்ள இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ராமின் படங்களில் ரயில் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ரயில்தான் களமே. ராமின் நாயகர்களுக்கே உரிய தோற்றமாக நீண்ட தாடியுடன் தோன்றும் நிவின் பாலியின் செய்கைகள் ஒவ்வொன்றும் மிரட்டல் என்றால், மாடர்ன் இளைஞராக வரும் சூரியின் ‘பீதி’யான வெளிப்பாடுகள் தனி ரகம். ஆங்காங்கே வசீகரமாக வந்து போகிறார் அஞ்சலி.