தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாகக் குறைந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 20-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக பதிவானது. 21-ம் தேதி காலையில் விநாடிக்கு 1,500 கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,200 கனஅடியாகக் குறைந்துள்ளது.