கோலி எதனால் ஒருநாள் ஃபார்மட்டில் சிறந்து விளங்கினார், அவரிடம் இன்னும் என்ன எதிர்பார்க்கலாம் என்று கேட்க, கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீயை அணுகினோம். விராட் கோலி என்று சொன்னதுமே, “அவர் தான் மிகச் சிறந்த ஒருநாள் வீரர்” யோசிக்காமல் சொல்லிவிட்டார். அதற்கான காரணங்களை விளக்கும் நானீ, கோலியை சிறந்து விளங்கவைத்த இரண்டு ஆயுதங்களையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்த ஆயுதத்தில் ஒன்றை இழந்ததுதான் கோவிட்டுப் பின்பான கோலியின் சரிவுக்குக் காரணமாகவும் சொல்கிறார் அவர்.

