பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம், பட்டப்படிப்பு கற்றல் முறைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்,
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: யுஜிசியின் வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. இவை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றன.