புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) இணையதளத்தின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை களையும் வண்ணம் புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து, இணையதளம் சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) போர்ட்டலின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கவனமாக ஆராய்ந்து, புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் இந்த அமைப்பு பயனுள்ள வகையில் செயல்படுகிறது. மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறை உட்பட போர்ட்டலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்கள் சிறப்பாக செயல்படுவதும் பயன்படுத்த எளிதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.