அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என இந்திய அந்த அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது போட்டி வரும் 14-ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளது.