மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
பிரிஸ்பன் போட்டியின் முடிவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார். இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் 26 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியன் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த தனுஷ் கோட்டியன் தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.