*போலீசார் விசாரணை
பல்லடம் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் மீனாட்சிபுரத்தில் சிவக்குமார் (50) என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி (46), மற்றும் தனது மகன் சந்துரு (25)ஆகியோருடன் வசித்து வந்தார்.சிவக்குமார் தனக்கு சொந்தமாக அருள்புரத்தில் நூல் பின்னும் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். நேற்று சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
சந்துரு மட்டும் வேலைக்கு சென்றுள்ளார்.சிவக்குமார் தனது மகன் சந்துருவிற்கு நேற்று ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.தனது தந்தை கூறியதை சந்துரு நம்பாத நிலையில், ராஜேஸ்வரி தூக்கில் தொங்கியபடி இருந்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் சிவக்குமார், சந்துருவிற்கு அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு புறப்பட்டுச் சென்ற சந்துரு உள்ளே சென்று பார்த்தபோது சிவக்குமாரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து சந்துரு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் காவல்துறையினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிவக்குமார் புதிய வீடு கட்டுவதற்காக கோவையில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்ததாகவும், கடந்த ஒரு வாரமாக கடனை வசூலிப்பதற்காக தனியார் வங்கி ஊழியர்கள் தொடர்ச்சியாக அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. சந்துரு அளித்த புகார் அடிப்படையில் பல்லடம் பல்லடம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கடன் தொல்லையால் விபரீத முடிவு பல்லடத்தில் தம்பதி தூக்கில் தற்கொலை appeared first on Dinakaran.