ஒட்டாவா: கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை சில நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் அவரை கத்தியால் குத்தி அவரை கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை என்றும், கனடா போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
The post கனடாவில் இந்திய இளைஞர் குத்திக் கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.