வான்கூவர்: ‘கனடா இறக்குமதி பொருட்களுக்கு டிரம்ப் 25 சதவீத வரி விதித்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்கர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி உள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அண்டை நாடான கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப் போவதாகவும் மிரட்டி வருகிறார். இதற்கு, பதிலளித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கனடா மீது அமெரிக்கா வரி விதித்ததால் நாங்களும் அவர்களின் பொருட்களுக்கு வரி விதித்து பதிலடி தர தயாராக இருக்கிறோம். ஏற்கனவே இதை நாங்கள் செய்துள்ளோம். இவ்வாறு கூறி உள்ளார்.
The post கனடாவுக்கு எதிரான டிரம்பின் வரி அச்சுறுத்தலால் அமெரிக்கர்களுக்கே பாதிப்பு: ட்ரூடோ பதிலடி appeared first on Dinakaran.