வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% வரி அமலுக்கு வந்தது. கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 25% வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சீன பொருட்களுக்கும் கூடுதல் வரி விதிப்பையும் டிரம்ப் அறிவித்திருந்தார். சீன பொருட்கள் மீதான 10 சதவீத வரி விதிப்பும் அமளுக்கு வந்தது. அமெரிக்காவுக்கு பதிலடியாக அந்நாட்டு பொருட்களுக்கு கனடா வரி விதித்துள்ளது
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் கடைசி நேரத்தில் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசிநேரத்தில் ட்ரம்ப் கோரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார்.
ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்புகளால் அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மேலும், இறக்குமதி வரிவிதிப்புகளால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், ட்ரம்ப் கடந்த ஆட்சியை காட்டிலும் இந்த முறை வரி விதிப்புகள் கடுமையை காட்டி வருகிறார்.
The post கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% வரி அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.