பாங்காக்: தாய்லாந்து, கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனிடையே, தாய்லாந்து பிரதமர் பேதோங்தான் ஷினவத்ரா கம்போடியா முன்னாள் பிரதமரும் அந்நாட்டு செனட் சபையின் தலைவருமான ஹுன்சென் உடன் கடந்த ஜூன் 15-ம் தேதி தொலைபேசியில் பேசிய உரையாடல் கசிந்தது.
அந்த உரையாடலில் அரசியல் சாசனத்துக்கு புறம்பாக தாய்லாந்து ராணுவ தளபதியை அவம் திக்கும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறி ஷினவத்ராவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இது தொடர்பாக அரசியல் சாசன நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜூலை 1-ம் தேதி ஷினவத்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.