
கர்னூல்: ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து கர்னூல் அருகே விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் சிரி தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஏ. சிரி, "பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 41 பேர் இருந்தனர். பேருந்து பைக் மீது மோதியதை அடுத்து அந்த பைக் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டது. பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீ பிடித்ததில் பேருந்து தீப்பிடித்துக்கொண்டது. இதில், பேருந்தில் இருந்த 41 பேரில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் இருந்து 11 இறந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 9 உடல்களை உறுதிப்படுத்த வேண்டும்.

