ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘கலியுகம்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘கலியுகம்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன.
தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். மே 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.