சென்னை: சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரி களுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 420 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று ஆர்எம்கே பொறியியல் கல்லூரி – லயோலா கல்லூரி அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த லயோலா அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வீர விஷ்வா 66 ரன்கள் சேர்த்தார். ஆர்எம்கே அணி தரப்பில் யோக பாரதி 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.