மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையுடன் சேர்த்து அவர் முழுமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டை வரும் நிதியாண்டுக்கு தந்துள்ளார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பொருளாதார செயல்பாட்டினை ஊக்குவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, நுகர்வை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை தூண்டுதல், திறன்மிக்க இளைஞர்களை உருவாக்குதல், புதிய தொழில்நுட்ப அறிவை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவைதவிர, மத்திய மக்களை மையப்படுத்தும் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் செல்வத்தை உருவாக்குவதற்கான பல்வேறு அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.